< Back
மாநில செய்திகள்
குண்டர் சட்டம் பாய்ந்தது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
6 Aug 2022 3:15 AM IST

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்தவர் ராமர் மகன் சுப்பிரமணியன் (வயது 39). களக்காடு ஜே.ஜே.நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (33). வள்ளியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராபின்சன் (29). இவர்கள் 3 பேர் மீதும் போதை பொருட்கள் விற்பனை வழக்குகள் உள்ளன. மேலும் இவர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர மேற்கு துணை கமிஷனர் (பொறுப்பு) அனிதா, டவுன் உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதனை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் ஏற்று சுப்பிரமணியன், மாரியப்பன், ராபின்சன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை இன்ஸ்பெக்டர் இளவரசன் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.

மேலும் செய்திகள்