திருநெல்வேலி
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|திசையன்விளை அருகே 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திசையன்விளை அருகே, 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கு
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 45). இவரை கடந்த மாதம் நவ்வலடி நடுத்தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (46). என்பவர் முன் விரோதம் காரணமாக கொலை செய்தார். இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
செல்வகுமாரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று செல்வகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் செல்வி நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்.
வாலிபர்
திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்த முத்து (36) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
கலெக்டர் விஷ்ணு இதை ஏற்று முத்துவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.