< Back
மாநில செய்திகள்
தொழிலாளியிடம் பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
மாநில செய்திகள்

தொழிலாளியிடம் பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
26 Aug 2022 1:35 AM IST

தொழிலாளியிடம் பணம் பறித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் ஒரு வணிக வளாகம் அருகே கடந்த மாதம் நடந்து சென்ற கூலித்தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்து சென்றதாக முத்துப்பாண்டி (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். விசாரணையில் முத்துப்பாண்டி மீது திருச்சியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்து இருந்ததாக ஒரு வழக்கு உள்பட 4 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள முத்துப்பாண்டியிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்