< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|2 July 2023 12:59 AM IST
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி,
திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்தவர் ராபாட்வின்ஸ்லி (வயது 22). இவர் தற்போது வழிப்பறி வழக்கில் பாலக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு, வழிப்பறி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பாலக்கரை போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து ராபாட்வின்ஸ்லியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார்.