திருநெல்வேலி
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|நெல்லை அருகே நடந்த கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கோபாலசமுத்திரம் பெட்ரோல் பங்க் பகுதியில் கடந்த 28.8.2023 அன்று சேரன்மாதேவியை சேர்ந்த கணேசன் (வயது 39) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தார். அதன்பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய கீழசெவல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (21), சேரன்மாதேவியை சேர்ந்த மாரிராஜ் என்ற ராசுக்குட்டி (26), இசக்கிபாண்டி என்ற சின்னதுரை (29), சரவணன் (22), தருவை சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த முத்து (22), பெருமாள் சுப்பிரமணியன் என்ற பாட்ஷா (20) உள்ளிட்ட 7 பேரை முன்னீர்பள்ளம் போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலச்செவல் ரஸ்தா வடக்கு தெருவை சேர்ந்த பிச்சை என்ற துரை மகன் லட்சுமிகாந்தன் என்ற கருப்பசாமி (28) என்பவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நெல்லை கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று லட்சுமிகாந்தனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் நேற்று மதுரை மத்திய சிறையில் வழங்கினார்.