< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|25 Sept 2023 2:00 AM IST
வேடசந்தூர் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய வழக்கில் வாலிபர் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளரான மல்லபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவரை பெரியகுளத்துபட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 32) என்பவர் கடந்த 2-ந்தேதி பீர்பாட்டிலால் தாக்கினார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலெக்டர் பூங்கொடியிடம் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.