< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|22 July 2023 3:23 AM IST
மூலைக்கரைப்பட்டி பகுதியில் வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம் மேல புளியங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் பிச்சைக்கண்ணு (வயது 23). இவர் நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அடிதடி, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டதால் மூலைக்கரைப்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று, பிச்சைக்கண்ணுவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேமா பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.