< Back
மாநில செய்திகள்
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
20 Oct 2023 12:37 AM IST

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் மேலசெவல் நடுத்தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயகுமார் என்ற அப்பாதுரை (வயது 65). இவர் கடந்த மாதம் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலசெவலை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்ற கண்ணன், முப்பிடாதி, மேலசெவல் ரஸ்தா தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி (21), நடுக்கல்லூர் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் பேச்சிமுத்து (20) ஆகியோரை கைது செய்தார். இதில் நவநீதகிருஷ்ணன் என்ற கண்ணன், முப்பிடாதி ஆகியோர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாயாண்டி, பேச்சிமுத்து ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் நாகர்கோவில் மத்திய சிறையில் வழங்கினார்.

மேலும் செய்திகள்