< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கீழே தள்ளிவிடப்பட்ட சாமி சிலைகள்
|21 Sept 2023 11:36 PM IST
கீழே தள்ளிவிடப்பட்ட சாமி சிலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் அருகே கல்பாடி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் விநாயகர் கோவில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு மர்ம நபர்கள் இந்த விநாயகர் கோவிலில் உள்ள 1 அடி நீளம் உள்ள எலி வாகன சிலை, 1 அடி உயரமுள்ள நாகக்கன்னி சிலைகள் இரண்டு என 3 கற்சிலைகளையும் பொருத்தி வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். ஆனால் அந்த கற்சிலைகள் சேதம் அடையவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.