< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டு வீசியது பாதுகாப்பு குறைபாடுகளையே காட்டுகிறது -அமைச்சர் பேட்டி
மாநில செய்திகள்

நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டு வீசியது பாதுகாப்பு குறைபாடுகளையே காட்டுகிறது -அமைச்சர் பேட்டி

தினத்தந்தி
|
15 Dec 2023 12:17 AM GMT

நாடாளுமன்றத்துக்குள் ஒரு குண்டூசியை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது தெரியவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய வேண்டும். இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

வேலூர்,

வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையை சுற்றி நீர் நிலைகளை உருவாக்க தமிழக அரசு நீண்ட காலமாக ஆலோசித்து வருகிறது. ராமஞ்சேரி தடுப்பணை கட்ட ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் போதிய அளவு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. திருக்கழுக்குன்றம் ஏரியில் கடந்த ஆட்சியில் தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை. எனவே சென்னையை சுற்றி உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் ஒரு அடி நீர் மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை அளித்த பின்பு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையை சுற்றி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அரசியல் தலையீடும் உள்ளது.

நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டு வீசிய சம்பவம் பாதுகாப்பு குறைபாடுகளையே காட்டுகிறது. நாடாளுமன்றத்துக்குள் ஒரு குண்டூசியை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது தெரியவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய வேண்டும். இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்