< Back
மாநில செய்திகள்
மாங்காட்டில் அடுத்தடுத்து 3 பேரை கத்தியால் வெட்டி வழிப்பறி; சிறுவன் உள்பட 3 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

மாங்காட்டில் அடுத்தடுத்து 3 பேரை கத்தியால் வெட்டி வழிப்பறி; சிறுவன் உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
22 Aug 2023 2:16 PM IST

மாங்காட்டில் அடுத்தடுத்து 3 பேரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழிப்பறி

காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை கோவூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ராஜேசை வழிமறித்து கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டி விட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்து சென்றனர்.

மேலும் பரணிபுத்தூர் மற்றும் சின்ன கொளுத்துவான்சேரி ஆகிய பகுதிகளில் நடந்த சென்று கொண்டிருந்த மேலும் 2 பேரை அதே மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

3 பேர் கைது

இதில் காயமடைந்த 3 பேரும் மாங்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஜெ.ஜெ நகரை சேர்ந்த சூர்யா (22), சந்தோஷ் (19), மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் 3 பேரும் வழிப்பறி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்