< Back
மாநில செய்திகள்
ஆபாச படம் எடுத்து மிரட்டல் - போலி இயக்குநர் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்
மாநில செய்திகள்

ஆபாச படம் எடுத்து மிரட்டல் - போலி இயக்குநர் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்

தினத்தந்தி
|
23 Sept 2022 2:17 PM IST

சேலத்தில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, பெண்களை ஆபாச படம் எடுத்த போலி இயக்குனரும், அவரது உதவியாளரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலத்தில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, பெண்களை ஆபாச படம் எடுத்த போலி இயக்குனர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பெயரில், போலி இயக்குனர் வேல் சத்திரியன் மற்றும் அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த நபர்களிம் இருந்து மெமரிகார்டு, லேப்டாப், செல்போன்கள், கணிப்பொறி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதனிடையே, வேல் சத்திரியன், ஜெயஜோதி ஆகிய இருவர், நடிக்க வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, பல இளம்பெண்களை ஏமாற்றி, ஆபாச படம் எடுத்து மிரட்டியது மற்றும் பொது ஒழுக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்