< Back
மாநில செய்திகள்
ரூ.5 லட்சம் கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு மிரட்டல்
சேலம்
மாநில செய்திகள்

ரூ.5 லட்சம் கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு மிரட்டல்

தினத்தந்தி
|
3 March 2023 1:00 AM IST

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கண்ணுசாமி, சுருதி திலக் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். ஆனால் அந்த பணத்தை அவர்கள் அவருக்கு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்ட இந்திரா பிரியதர்ஷினிக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கண்ணுசாமி, சுருதி திலக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்