< Back
மாநில செய்திகள்
சமூக ஆர்வலரை கடத்தி கொலைமிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
சிவகங்கை
மாநில செய்திகள்

சமூக ஆர்வலரை கடத்தி கொலைமிரட்டல்; 3 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
2 Jan 2023 12:15 AM IST

சமூக ஆர்வலரை கடத்தி கொலைமிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன். இவர் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளுவதை தடுக்கும் விதமாக இளையான்குடி நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பாலுசாமி, வருந்தி கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார், வாதவனேரி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் ராதாகிருஷ்ணனை காரில் கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செயின், சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்