< Back
மாநில செய்திகள்
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிமதுகுடிக்க பணம் கேட்ட 2 வாலிபர்கள் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிமதுகுடிக்க பணம் கேட்ட 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
16 Oct 2023 7:07 AM IST

தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி மதுகுடிக்க பணம் கேட்ட 2 வாலிபர்களை போலீசாா் கைது செய்தனா்.

ஈரோடு பெரியவலசு வள்ளியம்மை முதல் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 49). தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் ஒருவருடன் ஈரோடு சூளை டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.

ஆனால், சுரேஷ்குமார் பணம் தர மறுத்து கூச்சல் போட்டதால் அந்த வாலிபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுரேஷ்குமாரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியது ஈரோடு நாராயணவலசு திருமால் நகரை சேர்ந்த ரவி (23), மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

மேலும் செய்திகள்