< Back
மாநில செய்திகள்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் பூச்சொரிதல் விழா
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் பூச்சொரிதல் விழா

தினத்தந்தி
|
15 Aug 2023 6:45 PM GMT

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் பூச்சொரிதல் விழா

தொண்டி

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பூச்சொரிதல் விழா

திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும், சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் ஆளுகைக்கு உட்பட்டதுமான பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவெற்றியூர் வர்த்தக நல சங்கம் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவெற்றியூரில் வர்த்தக நல சங்கத்தினர் சார்பில் 49-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

இதனையொட்டி பாகம்பிரியாள் அம்மன், வல்மீகநாத சுவாமி, வாழவந்த அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும் சந்தன காப்பு அலங்காரம் மற்றும் விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றது. இரவு ஒரு மணி அளவில் சுவாமி, அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்திலும் அம்மன் புஷ்ப பல்லக்கு அலங்காரத்திலும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தேவஸ்தான சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், கிராம பிரமுகர்கள், தேவஸ்தான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சி

சிவகங்கை தேவஸ்தானத்தின் சார்பில் நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பூச்சொரிதல் விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவெற்றியூர் வர்த்தக சங்கத் தலைவர் குமரேசன், துணைத்தலைவர் அம்பலம், செயலாளர் வல்மீகநாதன், பொருளாளர் தங்கராஜ், துணைச் செயலாளர் தியாகராஜன் மற்றும் வர்த்தக நல சங்கத்தினர் திருவெற்றியூர் கிராம மக்கள் செய்து இருந்தனர். இதனையொட்டி வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்