< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல்' - வீரமுத்துவேல்
|28 Oct 2023 10:44 PM IST
இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்காத இடத்தில் சந்திரயான் தரையிறக்கப்பட்டது என வீரமுத்துவேல் தெரிவித்தார்.
கோவை,
கோவை காளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி குழுமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருடன் சந்திரயான்-3 திட்டம் குறித்து அதன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கிய பின் புழுதி ஒரு அச்சுறுத்தலாக இல்லை எனவும், இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்காத இடத்தில் சந்திரயான் தரையிறக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். மேலும் சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறான தகவல் என்றும் வீரமுத்துவேல் கூறினார்.