< Back
மாநில செய்திகள்
ரெயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது
கரூர்
மாநில செய்திகள்

ரெயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது

தினத்தந்தி
|
29 Sept 2023 11:38 PM IST

ரெயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்பது மீண்டும் நாட்டில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதால் இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து நேற்று மாவட்ட செயலாளர் ராஜூவ்காந்தி தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர் கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்