< Back
மாநில செய்திகள்
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மாநில செய்திகள்

"வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தினத்தந்தி
|
19 Nov 2022 6:47 PM IST

கடந்த ஒரு மாதத்தில் 64 நபர்களை கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 24-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;-

"வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். வேலைக்குச் சென்ற இடத்தில் தவறான பணிகளை செய்ய வற்புறுத்துவதால் தான் அவர்கள் அந்த வேலையை விட்டு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அந்த அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 64 நபர்களை கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளோம். அங்கே வேலை தேடி சென்று பல இன்னல்களுக்கு ஆளான இவர்களுக்காக விமான கட்டணம் தொடங்கி அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று, மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டுவதற்கான விழிப்புணர்வையும் உருவாக்கி வருகிறோம்."

இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்