< Back
மாநில செய்திகள்
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியவர்கள் யாரையும் விட்டுவிட முடியாது - கனிமொழி எம்.பி. பேட்டி
மாநில செய்திகள்

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியவர்கள் யாரையும் விட்டுவிட முடியாது - கனிமொழி எம்.பி. பேட்டி

தினத்தந்தி
|
25 Jan 2024 6:23 AM IST

தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் வீட்டில் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியவர்கள் யாரையும் விட்டு விட முடியாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுபோன்று மோசமாக இளம்பெண்ணை நடத்திய நபர்கள் யாரையும் விட்டு விட முடியாது. எப்படியும் திமுக அரசு, குற்றவாளிகளை கைது செய்து விடுவார்கள் என்பதை அறிந்து கொண்டு அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு பங்களிப்புடன் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசு சுணக்கம் காட்டுவதாக அண்ணாமலை கூறியிருப்பதாக கேட்கிறீர்கள். ஆனால் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முக்கால் பங்கு தமிழக அரசு வழங்குகிறது. உண்மையில் இந்த திட்டத்தை முதல்-மந்திரி திட்டம் என்று தான் கூற வேண்டும். இந்த திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்