< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் குமார் திடீர் சஸ்பெண்டு
|1 July 2023 12:15 AM IST
தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் குமார் வெள்ளிக்கிழமை திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் குமார். இவர் நேற்று பணி ஓய்வு பெறுவதாக இருந்தது. இவர் ஏற்கனவே வேலூரில் பணியாற்றிய போது வந்த, முறைகேடு புகார் விசாரணை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துணை ஆணையர் குமாரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.