< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் திங்கட்கிழமை முதல் வருகிற 10-ந் தேதி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் திங்கட்கிழமை முதல் வருகிற 10-ந் தேதி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

தினத்தந்தி
|
5 Jun 2022 5:10 PM IST

பாலம் பணிக்காக தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தம்

தூத்துக்குடி:

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

மேம்பாலம்

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை நாற்கர சாலையில் மீளவிட்டான் ரெயில்வே மேம்பாலத்தில் வலது பகுதி மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இடது புற சாலையில் பாலம் அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகள் நடந்து வந்தன. இதனால் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கனிமொழி எம்.பி. மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் ரூ.9 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

போக்குவரத்து நிறுத்தம்

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் மீளவிட்டான் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாலத்தில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் புதூர் பாண்டியாபுரம் முதல் இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா வரை உள்ள சாலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஆகையால் அந்த வழியாக வரும் லாரிகள், வாகனங்கள், பொதுமக்கள் அனைவரும் மாற்று சாலையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்