< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்கப்படுமா? -கனிமொழி எம்.பி விளக்கம்
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்கப்படுமா? -கனிமொழி எம்.பி விளக்கம்

தினத்தந்தி
|
22 Oct 2022 2:20 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய முதல்வரை விசாரிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய முதல்வரை விசாரிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய முதல்வரை விசாரிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறி உள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றும் கூறினார். சரியாக விசாரித்து விட்டு இன்னும் என்னென்ன பண்ணவேண்டுமோ அதை செய்வார். மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

அப்போதைய முதல்வர் மீதும் எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை என எழுந்துள்ள புகார் குறித்து கேட்டபோது, இதுதொடர்பாக முழுமையாக விசாரித்து முதல்வர்தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றார்.

மேலும் செய்திகள்