தூத்துக்குடி
லியோ திரைப்படம் சிறப்பு காட்சிகளில் விதிமீறலை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்தெரிவித்துள்ளார்.
|லியோ திரைப்படம் சிறப்பு காட்சிகளில் விதிமீறலை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படம் சிறப்பு காட்சிகளில் விதிமீறலை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ெசந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
லியோ திரைப்படம்
தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்களில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி நாளை (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை திரையிடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் நாளை முதல் 24-ந் தேதி வரை 5 காட்சிகள் அனுமதிக்கப்படுகிறது. இந்த காட்சிகள் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்குள் முடிவடையும் வகையில் திரையிட வேண்டும். அதிகாலை 1.30 மணி முதல் காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையிடக்கூடாது.
சிறப்பு குழு
அதே போன்று நிர்ணயிக்கப்பட்டு உள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி தாசில்தார் 94450 00680, திருச்செந்தூர் தாசில்தார் 94450 00682, சாத்தான்குளம் தாசில்தார் 94450 00683, ஏரல் தாசில்தார் 93840 95008, கோவில்பட்டி தாசில்தார் 94450 00684, உதவி கலெக்டர் (தூத்துக்குடி) 94450 00479, திருச்செந்தூர் உதவி கலெக்டர் 94450 00480, கோவில்பட்டி உதவி கலெக்டர் 94450 00481 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். தியேட்டர்களில் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்ல, சரியான சீட் வசதிகள், வாகன நிறுத்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறுவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.