< Back
மாநில செய்திகள்
குற்றால அருவியில் விழுந்த சிறுமியை காப்பாற்றிய இளைஞர் - நேரில் அழைத்து கவுரவித்த தூத்துக்குடி கலெக்டர்
மாநில செய்திகள்

குற்றால அருவியில் விழுந்த சிறுமியை காப்பாற்றிய இளைஞர் - நேரில் அழைத்து கவுரவித்த தூத்துக்குடி கலெக்டர்

தினத்தந்தி
|
31 Dec 2022 9:00 PM IST

சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் விஜயகுமாரை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.

தூத்துக்குடி,

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கடந்த 29-ந்தேதி பாலக்காடு பகுதியைச் சேர்ந்த நவநீதன் என்பவரது பெண் குழந்தை திடீரென அருவியில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் உடனடியாக தண்ணீரில் குதித்து சிறுமியை காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், விஜயகுமாருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், இன்று விஜயகுமாரை நேரில் அழைத்து சிறுமியின் உயிரை காப்பாற்றியதற்காக பாராட்டு தெரிவித்தார். மேலும் அவருக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கவுரவித்த கலெக்டர் செந்தில்குமார், வருங்காலத்தில் எந்த உதவி தேவை என்றாலும் தன்னை அணுகுமாறு விஜயகுமாரிடம் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்