< Back
மாநில செய்திகள்
கச்சத்தீவில் நிறுவிய புத்தர் சிலையை அகற்றக்கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்
மாநில செய்திகள்

கச்சத்தீவில் நிறுவிய புத்தர் சிலையை அகற்றக்கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்

தினத்தந்தி
|
28 March 2023 11:19 PM IST

கச்சத்தீவில் நிறுவிய புத்தர் சிலையை அகற்றக்கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மான மனு அளித்து உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார்.

"சிங்கள இன வெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போது வரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது. ஆண்டுதோறும் அங்கே கிறிஸ்தவ திருவிழா நடைபெற்றுவருகிறது. கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இன வெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவத்திட்டமிட்டுள்ளனர். இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும்.

இதனை வன்மையாகக்கண்டிக்கிறோம். அந்த சிலையை அங்கிருந்து அகற்றி மத நல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக்குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான மனு அளித்துள்ளேன்.

மேற்கண்ட தகவல் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்