கரூர்
தோகைமலை ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்
|தோகைமலை ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.
தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி சசிகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாப்பாத்தி சின்னவழியான், ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், குடிநீர் விஸ்தரிப்பு, புதிய சாலைகள், பழமை வாய்ந்த கட்டிடங்களை சீரமைப்பு செய்தல், செலவினங்கள் உள்பட 25 தீர்மானங்களை அலுவலர் பழனிகணேஷ் வாசித்தார். பின்னர் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பிறகு ஒன்றிய கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில், கவுன்சிலர்கள் முருகேசன், முத்துக்கண்ணு, சுந்தரவள்ளி, சரண்யா, குமதி, வளர்மதி, குமார், தனலட்சுமதி, புவனேஸ்வரன், சின்னையன், ஒன்றிய பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.