கரூர்
தோகைமலை பக்தர்கள் சமயபுரத்திற்கு பூத்தட்டுகள் எடுத்து ஊர்வலம்
|தோகைமலை பக்தர்கள் சமயபுரத்திற்கு பூத்தட்டுகள் எடுத்து ஊர்வலமாக சென்றனர்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்திருவிழா வருகிற 18-ந்தேதி நடைபெற பெற உள்ளது. இதையொட்டி ஆண்டுதோறும் தோகைமலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்கள் பூச்சொரிதல் விழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தோகைமலை பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் தோகைமலையில் உள்ள விநாயகர், கன்னிமார் அம்மன், பகவதியம்மன், மகாமாரியம்மன், கருப்பசாமி, வரதராஜபெருமாள் ஆகிய கோவில்களுக்கு புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தோகைமலை குறிச்சி பகவதி அம்மன் கோவிலில் பூத்தட்டுகளை வைத்து பக்தர்கள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மன் சுவரி சிலையை ஒரு டிராக்டரில் ஏற்றி கொண்டு, கையில் பூத்தட்டுகளுடன் பக்தர்கள் சமயபுரத்திற்கு புறப்பட்டு வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.