< Back
மாநில செய்திகள்
கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம் -  பிரேமலதா விஜயகாந்த்
அரியலூர்
மாநில செய்திகள்

கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம் - பிரேமலதா விஜயகாந்த்

தினத்தந்தி
|
25 May 2022 8:11 PM IST

மத்திய அரசு கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம், அதனை செய்து தமிழக மீனவர்கள் நலனை காக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.


அரியலூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது.

தமிழக அரசின் ஓராண்டு சாதனையில் போற்ற கூடிய சாதனைகள் எதுவும் பார்க்க முடியவில்லை, இன்னும்‌ செய்ய வேண்டியது அதிகமாக உள்ளது.

தமிழக முழுவதும் மின்வெட்டு உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ரேசன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதில் இருந்து இன்றை‌ய தமிழகத்தின் நிலையை பார்க்க முடிகிறது. பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு சம்பவம், சட்ட ஒழுங்கு எந்த அளவிற்க்கு கேள்வி குறியாகி உள்ளது என்பதை மக்களே அறிவார்கள். மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு அரசாகவே உள்ளது.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இலவசங்கள் தொடர்ந்தால் இலங்கை போல் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

மத்திய அரசு கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம் அதனை செய்து தமிழக மீனவர்கள் நலனை காக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்