< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் ஏற்பாடுதான் இது - வேல்முருகன் எம்.எல்.ஏ
|28 Nov 2022 5:14 PM IST
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் ஏற்பாடுதான் இது என வேல்முருகன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ நிருபர்களை சந்தித்து கூறியதாவது,
இது மத்திய அரசின் உத்தரவு. அதை தமிழக அரசு சிரமேற்கொண்டு உடனடியாக இணைக்க முயற்சிக்கிறார்கள். எது ஏற்புடையது அல்ல. இப்படி இணைப்பதால் அதிக மின்சாரத்தை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள் என்று மானியத்தை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முன்னேற்பாடுதான் இது.
மீட்டர் பொருத்தப்படுவதும் இதற்கான முன்னேற்பாடு தான். ஆதாரை இணைப்பது என்பது ஒரு விவசாயி ஒரு மின் இணைப்புக்கு மேல் வைத்திருப்பதை கண்டுபிடித்து அதனை துண்டிப்பதற்கு எடுக்கின்ற சூழ்ச்சியான நடவடிக்கை என கூறினார்.