< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை

தினத்தந்தி
|
22 July 2022 7:01 PM GMT

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 301 பெண்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு காமாட்சி அம்மன் விளக்கு, தாலிக்கயிறு மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து குடும்ப நலன், நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவில், முள்ளங்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில், கறம்பக்குடி காசாம்பூநீலமேனி கருப்பர்கோவில், மழையூர் அய்யப்பன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. கறம்பக்குடி சின்ன கருப்பர் வண்ணாத்தாள் மற்றும் மழையூர் அய்யப்பன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்காண பெண்கள் கலந்துகொண்டனர். பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத சோழீஸ்வரர் கோவிலில் 62-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பித்த பின்பு 1,008 பெண்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் திருவிளக்குகளை ஏற்றி சிறப்பு பூஜைகளை செய்தனர்.

மேலும் செய்திகள்