ராமநாதபுரம்
கலைத்திருவிழா போட்டிகள்
|கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன.
ராமநாதபுரம் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி திட்ட அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் ராமநாதபுரம் வட்டாரத்தை சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நடனம், குழு நடனம், இசைப்பாட்டு, கருவி இசை, மொழித்திறன், நாடகம் உள்பட 36 வகையான கலைப்போட்டிகள் நடைபெற்றன. வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுவினர், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.