< Back
மாநில செய்திகள்
மழைவேண்டி முளைப்பாரி திருவிழா
சிவகங்கை
மாநில செய்திகள்

மழைவேண்டி முளைப்பாரி திருவிழா

தினத்தந்தி
|
6 Oct 2022 12:44 AM IST

மழைவேண்டி முளைப்பாரி திருவிழா நடந்தது.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. குமாரக் குறிச்சி கீழத்தெரு கிராம பொதுமக்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து முளைப்பாரி திருவிழாவை கொண்டாடினர்.நிகழ்ச்சியில் ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியடித்து மழை வேண்டி முளைப்பாரி வளர்த்து திருவிழா கொண்டாடினர். கோவில் பூசாரி காரிமுத்து கரகம் எடுத்து ஆடினார். கிராமத்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஒயிலாட்டம், கும்மியடித்து வேண்டுதலை நிறைவேற்றினர். கோவில் பூசாரிகள் சுப்பிரமணி, முத்து வேளாளர் ஆகியோர் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை மற்றும் விசேஷ பூஜை நடத்தினர்.ஒயிலாட்ட கலைக்குழு ஆசிரியர்கள் ராமசாமி, முருகேசன், பால் பண்ணை ராமசாமி ஆகியோர் ஒயிலாட்ட பாடல்கள் பாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினர். கலைக்குழுவினருடன் இணைந்து பாண்டித்துரை மிருதங்கம் இசைத்தார். முளைப் பாரிகளை பெண்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபாடு செய்து அய்யனார் குளத்தில் கரைத்தனர். ஏற்பாடுகளை கீழத்தெரு விழா குழுவினர் மற்றும் ராணி வேலுநாச்சியார் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்