ராமநாதபுரம்
எருதுகட்டு விழா
|உமையநாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருதுகட்டு விழா நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தில் உள்ள உமையநாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். பொண்ணு பெருமாள், ராஜாராம், செந்தூரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 6-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பால்குட அபிஷேகம், பொங்கல்வைத்தல், முளைப்பாரி, கும்மி, கோலாட்டம், அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எருதுகட்டு விழாவில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 13 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக களம் இறங்கின. காளை களை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும், பிடி படாத மாடுகளுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உமையநாயகி அம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். எஸ்.தரைக்குடி, செவல் பட்டி, வாலம்பட்டி, முத்துராமலிங்கபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.