ராமநாதபுரம்
அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
|அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூரில் பிரசித்திபெற்ற வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆடித் திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். விழாவில் 8-ம் நாள் நிகழ்ச்சியாக அக்னி சட்டி எடுத்தல், கரும்புத் தொட்டில், மாவிளக்கு, ஆயிரம் கண் பானை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பக்தர்கள் செலுத்தினர். முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி திருவிழாவில் முதுகுளத்தூர், தூரி, செல்வநாயகபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்ன கண்ணு தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.