< Back
மாநில செய்திகள்
பூக்குழி திருவிழா
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பூக்குழி திருவிழா

தினத்தந்தி
|
20 July 2022 8:11 PM IST

முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.

தொண்டி,

திருவாடானை தென்கிழக்கு தெரு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர் வலமாக சென்று பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் தீப ஆராதனை நடைபெற்றது. அம்மன் மஞ்சள் அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். முளைக் கொட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வண்ண மின் விளக்குகளால் கோவில் அலங் கரிக்கப்பட்டு இருந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்