சிவகங்கை
ஆனிமாத தீர்த்த உற்சவம்
|ஆனிமாத தீர்த்த உற்சவம் நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே முறையூரில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து 10-ம் நாள் திருவிழாவான பஞ்சமூர்த்தி புறப்பாடு மற்றும் தீர்த்த உற்சவம் நடைபெற்றது. இதில் பஞ்சமூர்த்தி களான விநாயகர், முருகன், சண்டிகேசுவரர், சொக்கநாதர் பிரியாவிடை அம்மன், மீனாட்சி அம்பாள் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்காரமும், மூலவர் சொக்கநாதர் மற்றும் பிரியாவிடை அம்மன். மீனாட்சி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை காப்பு இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆனி மாத திருவிழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் முறையூர் கிராமத்தினர் செய்து இருந்தனர்.