< Back
மாநில செய்திகள்
ஆனி பிரம்மோற்சவ திருவிழா
விருதுநகர்
மாநில செய்திகள்

ஆனி பிரம்மோற்சவ திருவிழா

தினத்தந்தி
|
6 July 2022 12:24 AM IST

சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சாத்தூர்,

சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்திருப்பதி

சாத்தூர் வைப்பாற்றங்கரையில் அமைந்து உள்ள தென் திருப்பதி என அழைக்கப்படும் வெங்கடாசலபதி கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராய் நின்ற திருக்கோலத்தில் கல்யாண விசேடராக சாத்தூரப்பன் என்ற திருநாமத்துடன் வெங்கடாசலபதி அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலின் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வெங்கடாசலபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கொடியேற்றம்

தொடர்ந்து கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறும். விழாவில் 12 நாட்களும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம் மற்றும் குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தேரோட்டம்

ஆனி பிரம்மோற்சவ திருவிழாவில் 9-ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷினி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்