ராமநாதபுரம்
தூய பேதுரு பவுல் ஆலய சப்பரபவனி
|தூய பேதுரு பவுல் ஆலய சப்பரபவனி நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே உள்ள நெடுமரம் கிராமத்தில் தூய பேதுரு பவுல் ஆலய திருவிழா 5 நாட்கள் நடைபெற்றது. தந்தை ஞானதாசன் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திவ்ய நற்கருணை ஆராதனை மற்றும் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதனை அருட்தந்தையர்கள் ஜோஸ்வா ஞான தாசன், இருதயராஜ் ஆகியோர் நிறை வேற்றினர். தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட சப்பர பவனி நடைபெற்றது. இதில் புனித ராயப்பர், சின்னப்பர், மிக்கேல் அதிதூதர், ஆரோக்கிய மாதா ஆகியோர் பவனியாக வந்து பக்தர்களுக்கு இறை ஆசீர் வழங்கினர். நேற்று காலை அருட்தந்தை வசந்த் தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் சப்பரப்பவனி, கொடி இறக்கம் நடை பெற்றது. இதில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், நெடுமரம் கிராம முக்கியஸ்தர்கள், கூகுடி ஊராட்சி தலைவர் சரவணன், மங்களக்குடி ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.