< Back
மாநில செய்திகள்
மீன்பிடி திருவிழா
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
27 Jun 2022 10:56 PM IST

கமுதி அருகே மீன்பிடி திருவிழா நடந்தது.

கமுதி,

கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஊராட்சியில் உள்ள எம்.பச்சேரி கிராமத்தில் ஊருணியில் 2 ஆண்டுகளுக்குபின் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து போட்டி போட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.இந்த மீன்பிடி திருவிழாவில் மீன் வலைகள், கச்சா வலைகள், கொசு வலைகள் கொண்டு கெண்டை, அயிரை, கெளுத்தி, விரால், குரவை மீன்களை ஏராள மானவர்கள் பிடித்தனர்.மீன் பிடி திருவிழாவால் கிராமத்தில் அனைவரது வீடுகளிலும் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.

மேலும் செய்திகள்