< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்
|24 Sept 2023 1:22 AM IST
திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு கட்டப்பட்ட தனி வீடுகளை சில நாட்களுக்கு முன்பு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் திருச்சி திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் மொத்தம் 30 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதையொட்டி அங்கு நடந்த நிகழ்ச்சிக்கான விழா மேடை தாமதமாக அமைக்கப்பட்டதாகவும், காணொலி காட்சிக்கான இணைப்பு சரியாக கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களுக்காக திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமணியை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.