< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருவண்ணாமலை: கைவிடப்பட்ட 1,333 ஆழ்துளை கிணறுகள் 14 நாட்களில் மீட்பு
|4 Feb 2023 11:39 PM IST
திருவண்ணாமலையில் 14 நாட்களில் மொத்தம் 1,333 ஆழ்துளை கிணறுகள் சீர்செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை,
சுற்றுச்சூழலையும், பசுமையையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பண்ணைக் குளங்கள் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணாமலையில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி சுமார் 6.67 கோடி ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மீள்நிரப்ப கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து 14 நாட்களில் மொத்தம் 1,333 ஆழ்துளை கிணறுகள் சீர்செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இந்த பணியை மேற்கொண்ட குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.