< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலம்: சென்னை - திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலம்: சென்னை - திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தினத்தந்தி
|
28 July 2023 10:00 AM IST

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட்1-ம் தேதி சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட்1 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் சென்னை- திருவண்ணாமலை-சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, ஆகஸ்ட்.1-ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3, 4 மற்றும் 5 மணிக்கும், ஆகஸ்ட் 2-ஆம் தேதி மறுமாா்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3, 4 மற்றும் 5 மணிக்கும் இந்த பேருந்துகள் புறப்படும்.

மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய கைப்பேசி: 9445014452 , தலைமையக கைப்பேசி: 9445014463, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்