< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருவண்ணாமலை: லாரி டியூப்களில் பதுக்கி வைக்கப்பட்ட 55 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது
|26 May 2023 10:58 PM IST
வீட்டின் பின்புறத்தில் லாரி டியூப்களில் சாராயத்தை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் சிலர் சாராயத்தை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அங்குள்ள குன்றுமேடு பகுதியில் வசித்து வரும் பரசுராமன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்க்கொண்டனர். அப்போது அவரது வீட்டின் பின்புறத்தில் லாரி டியூப்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், பரசுராமனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.