பிரான்சில் திருவள்ளுவர் சிலை: பிரதமருக்கு அண்ணாமலை நன்றி
|பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
சென்னை,
பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
நமது பாரதப் பிரதமர் மோடி, கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார்.
இன்று, பிரதமர் மோடி, நமது தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்புக்கும், திருக்குறளின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல அவர் எடுத்துள்ள முயற்சிகளுக்கும், பணிகளுக்கும் சான்றாக, செர்ஜி நகரில் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கிறது.
நமது தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் பரப்பியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.