< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான மக்கும் குப்பையாக மாற்றும் மோட்டார் எந்திரம் திருட்டு
|26 Aug 2022 1:35 PM IST
திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான மக்கும் குப்பையாக மாற்றும் மோட்டார் எந்திரம் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான மங்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் உள்ளது. இங்கு உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகளாக மாற்றும் 20 குதிரை திறன் கொண்ட மோட்டார் எந்திரம் ஒன்று காணாமல் போனது. இது குறித்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.