< Back
மாநில செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி திருவள்ளூர் மாவட்ட அணி வெற்றி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி திருவள்ளூர் மாவட்ட அணி வெற்றி

தினத்தந்தி
|
12 July 2022 4:22 PM IST

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அணி வெற்றி பெற்றனர்.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7-ந் தேதி துவங்கி 9-ந் தேதி வரை நடைபெற்றது.

இதில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், நீச்சல் மற்றும் துறை ரீதியான போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார் அவர்கள் தலைமையிலான திருவள்ளூர் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு தீயணைப்பு துறையின் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் பரிசு கோப்பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வடமேற்கு மண்டலத்தைச் சார்ந்த தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்கள், உதவி மாவட்ட அலுவலர்கள், நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்