< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே ஆசிரியை வீட்டில் புகுந்து நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே ஆசிரியை வீட்டில் புகுந்து நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
18 Feb 2023 2:16 PM IST

திருவள்ளூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து நகை,பணம் திருடிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனியை சேர்ந்தவர் அசோக் டார்ஜன் (வயது 32). இவர் அந்த பகுதியில் பூக்கள் மற்றும் செடிகளை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி திலகவதி. இவர் திருவள்ளூர் அடுத்த விடையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். அவர்களது பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றனர்.

மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பீரோவில் பார்த்தபோது அதிலிருந்து 5 பவுன் தங்க நகையும், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ரொக்க பணம் ரூ.85 ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அசோக் டார்ஜன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்