< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்: ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்துக்கு தடை
மாநில செய்திகள்

திருவள்ளூர்: ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்துக்கு தடை

தினத்தந்தி
|
10 Dec 2022 9:03 PM GMT

ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

திருவள்ளூர்,

தொடர்மழை காரணமாக 281 அடி உயரம் கொண்ட பிச்சாட்டூர் அணையின் நீர்மட்டம் 274 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 3,900 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆற்றின் கரையோர பகுதிகளான பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரணி, கவரப்பேட்டை, ஏலியம்பேடு, பொன்னேரி, பெரும்பேடு, ஆண்டார்மடம் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போலீசார் தடுப்புகளை அமைத்து அவ்வழியாக போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்