< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர், கோவை அணிகள் முதலிடம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

திருவள்ளூர், கோவை அணிகள் முதலிடம்

தினத்தந்தி
|
9 July 2023 9:36 PM IST

மாநில அளவிலான சப்-ஜூனியர் எறிபந்து போட்டியில் திருவள்ளூர், கோவை அணிகள் முதலிடம் பிடித்தது.

திருவண்ணாமலை மாவட்ட எறிபந்து சங்கம் மற்றும் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் 18-வது மாநில அளவிலான சப்-ஜூனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. .

தொடர்ந்து 3 நாட்கள் பகல், இரவு போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 ஆண்கள் அணியும், 30 பெண்கள் அணியும் கலந்து கொண்டது.

இந்த நிலையில் இன்று இப்போட்டிகள் நிறைவு பெற்றது. இதில் பெண்கள் பிரிவில் திருவள்ளூர் மாவட்ட அணி முதலிடத்தையும், கரூர் மாவட்ட அணி 2-ம் இடத்தையும், சென்னை அணி 3-ம் இடத்தையும் பிடித்தது.

ஆண்கள் பிரிவில் கோவை மாவட்ட அணி முதல் இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட அணி 2-ம் இடத்தையும், சென்னை மாவட்ட அணி 3-ம் இடத்தையும் பெற்றது.

பெண்கள் பிரிவில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்யமித்ராவும், ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அகிலேஷ் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பதக்கம் மற்றும் வெற்றிக் கோப்பையை வழங்கி பாராட்டி பேசினார்.

இதில் எறிபந்து சங்க மாநில தலைவர் பாலவிநாயகம், பொருளாளர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் அரவிந்த்குமார், தர்ஷன், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்